caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 142

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:142

سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمْ عَن قِبْلَتِهِمُ ٱلَّتِى كَانُوا۟ عَلَيْهَا قُل لِّلَّهِ ٱلْمَشْرِقُ وَٱلْمَغْرِبُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"அவர்கள் (தொழுது கொண்டு) இருந்த அவர்களின் கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?" என (முஸ்லிம்களைப் பற்றி) மக்களில் உள்ள அறிவீனர்கள் கூறுவார்கள். (அதற்கு) கூறுவீராக! "கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு நேர்வழி காட்டுகிறான்."
Tamil Translation - Omar Sharif“அவர்கள் எந்த கிப்லாவை நோக்கி (தொழுபவர்களாக) இருந்தார்களோ அவர்களின் அந்த கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?’’ என (முஸ்லிம்களைப் பற்றி) மக்களில் உள்ள அறிவீனர்கள் கூறுவார்கள். (அதற்கு நபியே! நீர்) கூறுவீராக: “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்குரியனவே! அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு நேர்வழி காட்டுகிறான்.’’
Tamil Translation - Abdulhamid Baqawi142. (நபியே! ‘‘முஸ்லிம்கள்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டது எது?'' என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துவான்.''
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70