وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَٰتُنَا بَيِّنَٰتٍ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَىُّ ٱلْفَرِيقَيْنِ خَيْرٌ مَّقَامًا وَأَحْسَنُ نَدِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு கூறுகின்றனர்: “இரு பிரிவினரில் யார் தங்குமிடத்தால் சிறந்தவர், சபையால் மிக அழகானவர்?”
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு முன் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி, “(நம்) இரு பிரிவுகளில் தங்குமிடத்தால் யார் சிறந்தவர், இன்னும், சபையால் யார் மிக அழகானவர்?” என்று (கேலியாக) கூறுகிறார்கள்:
Tamil Translation - Abdulhamid Baqawi73. நிராகரிப்பவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?'' என்று கேட்கின்றனர்.