فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் அவர்களையும் ஷைத்தான்களையும் எழுப்புவோம். பிறகு, நரகத்தை சுற்றி அவர்களை முழந்தாளிட்டவர்களாகக் கொண்டு வருவோம்.
Tamil Translation - Omar Sharifஆக, உமது இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் அவர்களையும் ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பிறகு, அவர்கள் முழங்காலிட்டவர்களாக இருக்கும் நிலையில் நரகத்திற்கு அருகில் அவர்களைக் கொண்டுவருவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi68. ஆகவே, (நபியே!) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், (அவர்கள் வணங்குகிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக அவர்களை ஒன்று சேர்ப்போம்.