قَالَ أَرَاغِبٌ أَنتَ عَنْ ءَالِهَتِى يَٰٓإِبْرَٰهِيمُ لَئِن لَّمْ تَنتَهِ لَأَرْجُمَنَّكَ وَٱهْجُرْنِى مَلِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(தந்தை) கூறினார்: இப்ராஹீமே! என் தெய்வங்களை நீ வெறுக்கிறாயா? நீ (இவற்றை குறை கூறுவதிலிருந்து) விலகவில்லையெனில் நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன். (நான் உன்னை ஏசுவதற்கு முன்னர்) பாதுகாப்புப் பெற்றவராக என்னை விட்டு விலகிவிடு!
Tamil Translation - Omar Sharif(இப்ராஹீமின் தந்தை) கூறினார்: இப்ராஹீமே! என் தெய்வங்களை நீ வெறுக்கிறாயா? நீ (இவற்றை குறை கூறுவதிலிருந்து) விலகவில்லையெனில் நிச்சயமாக நான் உன்னை மிக அசிங்கமாக ஏசுவேன். (நான் உன்னை ஏசுவதற்கு முன்னர் உன் கண்ணியம்) பாதுகாக்கப்பட்டவராக என்னை விட்டு விலகி சென்றுவிடு!
Tamil Translation - Abdulhamid Baqawi46. அதற்கவர் ‘‘இப்றாஹீமே! நீ என் தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீ எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்'' என்று கூறினார்.