وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவன் நான் எங்கிருந்தாலும் என்னை அருள்மிக்கவனாக (மக்களுக்கு நன்மையை ஏவுகின்றவனாக) ஆக்குவான். நான் உயிருள்ளவனாக இருக்கின்றவரை தொழுகையைக் கொண்டும் ஸகாத்தைக் கொண்டும் அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியமிக்கவனாக (மக்களுக்கு நன்மையை ஏவி, தீமையை தடுப்பவனாக, நல்லவற்றை கற்பிப்பவனாக, மக்களுக்கு நன்மை செய்பவனாக) ஆக்குவான். இன்னும், நான் உயிருள்ளவனாக இருக்கின்றவரை தொழுகையையும் தர்மத்தையும் (பாவங்களை விட்டு விலகி தூய்மையாக இருப்பதையும்) அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்.