caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Maryam அத்தியாயம், வசனம் 26

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 44 · 19:26

فَكُلِى وَٱشْرَبِى وَقَرِّى عَيْنًا فَإِمَّا تَرَيِنَّ مِنَ ٱلْبَشَرِ أَحَدًا فَقُولِىٓ إِنِّى نَذَرْتُ لِلرَّحْمَٰنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ ٱلْيَوْمَ إِنسِيًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் நீர் (அதை) புசிப்பீராக! (அந்த ஊற்றிலிருந்து) பருகுவீராக! கண் குளிர்வீராக! மனிதரில் யாரையும் நீர் பார்த்தால் நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பை -பேசாமல் இருப்பதை- நேர்ச்சை செய்துள்ளேன். ஆகவே, இன்று நான் எந்த மனிதனிடமும் அறவே பேசமாட்டேன் என்று கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif“ஆக, நீர் (அந்த மரத்திலிருந்து விழும் பழங்களை) புசிப்பீராக! இன்னும், (அந்த நீரோடையிலிருந்து) பருகுவீராக! கண் குளிர்வீராக! ஆக, மனிதர்களில் யாரையும் நீர் பார்த்தால், “நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பை (-பேசாமல் இருப்பதை) நேர்ச்சை செய்துள்ளேன். ஆகவே, இன்று நான் எந்த மனிதனிடமும் அறவே பேசமாட்டேன்” என்று கூறுவீராக!”
Tamil Translation - Abdulhamid Baqawi26. ஆகவே, (அப்பழங்களை) நீர் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) கண் குளிர்ந்திருப்பீராக! மனிதரில் எவரைக் கண்ட போதிலும் ‘‘நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்க முடிவு செய்துள்ளேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன் என்று கூறிவிடுவீராக'' என்றும் கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70