فَأَجَآءَهَا ٱلْمَخَاضُ إِلَىٰ جِذْعِ ٱلنَّخْلَةِ قَالَتْ يَٰلَيْتَنِى مِتُّ قَبْلَ هَٰذَا وَكُنتُ نَسْيًا مَّنسِيًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிரசவ வேதனை அவரை பேரிச்சமரத்தடிக்கு கொண்டு சென்றது. அவர் கூறினார்: இதற்கு முன்னரே நான் மரணிக்க வேண்டுமே! முற்றிலும் மறக்கப்பட்டவளாக நான் (ஆகி) இருக்க வேண்டுமே!
Tamil Translation - Omar Sharifஆக, (அவளுக்கு) பிரசவ வலி (ஏற்பட்டு அது) அவளை பேரீச்ச மரத்தின் பக்கம் கொண்டு சென்றது. அவள் கூறினாள்: “இதற்கு முன்னர் நான் மரணித்திருக்க வேண்டுமே! இன்னும், முற்றிலும் (மக்களின் சிந்தனையிலிருந்து) மறக்கப்பட்டவளாக நான் (ஆகி) இருக்க வேண்டுமே!”
Tamil Translation - Abdulhamid Baqawi23. பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ‘‘இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என் எண்ணமே (ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு) முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே'' என்று (வேதனையுடன்) கூறினார்.