قَالَ هَٰذَا فِرَاقُ بَيْنِى وَبَيْنِكَ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِع عَّلَيْهِ صَبْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர், “எனக்கிடையிலும் உமக்கிடையிலும் இதுவே பிரிவினை(க்குரிய நேரம்). நீர் பொறு(த்திரு)க்க இயலாதவற்றின் விளக்கத்தை உமக்கு அறிவிப்பேன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: எனக்கிடையிலும் உமக்கிடையிலும் இதுவே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும். நீர் பொறுமையாக இருக்க இயலாதவற்றின் விளக்கத்தை உமக்கு விரைவில் அறிவிப்பேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi78. அதற்கவர், ‘‘எனக்கும் உமக்கும் இடையில் இதுவே பிரிவினை(க்குரிய நேரம்) ஆகும். நீர் பொறுத்துக்கொள்ள முடியாமல்போன விஷயங்களின் விளக்கத்தை (இதோ) நான் உமக்கு அறிவிக்கிறேன் என்று கூறினார்.