caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 74

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:74

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا لَقِيَا غُلَٰمًا فَقَتَلَهُۥ قَالَ أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةًۢ بِغَيْرِ نَفْسٍ لَّقَدْ جِئْتَ شَيْـًٔا نُّكْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே. இருவரும் சென்றனர். இறுதியாக, (வழியில்) இருவரும் ஒரு சிறுவனைச் சந்தித்தபோது (அவர்) அவனைக் கொன்றார். “ஓர் உயிரைக் கொன்ற குற்றமின்றி ஒரு பரிசுத்தமான உயிரைக் கொன்றீரா? திட்டவட்டமாக நீர் ஒரு மகா கொடிய செயலை செய்தீர்” என்று (மூஸா) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக. இருவரும் சென்றனர். இறுதியாக, இருவரும் (வழியில்) ஒரு சிறுவனைச் சந்தித்தபோது, ஆக, (அவர்) அவனைக் கொன்று விட்டார். (உடனே, மூஸா) கூறினார்: “ஓர் உயிரைக் கொன்ற குற்றம் (அதனிடம்) இல்லாமல் ஒரு பரிசுத்தமான உயிரைக் கொன்று விட்டீரா? திட்டவட்டமாக நீர் ஒரு மகா கொடிய செயலை செய்து விட்டீர்.”
Tamil Translation - Abdulhamid Baqawi74. பின்னர் இருவரும் நடந்தனர். (வழியில் விளையாடிக் கொண்டிருந்த) ஒரு சிறுவனைச் சந்தித்தபோது அவர் அவனைக் கொலை செய்து விட்டார். அதற்கு மூஸா, ‘‘கொலை குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவை கொலை செய்து விட்டீர்! நிச்சயமாக ஒரு தகாத காரியத்தையே நீர் செய்து விட்டீர்'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70