caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 71

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:71

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا رَكِبَا فِى ٱلسَّفِينَةِ خَرَقَهَا قَالَ أَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْـًٔا إِمْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, இருவரும் சென்றனர். இறுதியாக, கப்பலில் இருவரும் பயணித்த போது, அவர் அதை ஓட்டையாக்கினார். “இதில் உள்ளவர்களை மூழ்கடிக்க அதை ஓட்டையாக்கினீரா? திட்டவட்டமாக மிக (அபாயகரமான) கெட்ட காரியத்தைச் செய்தீர்” என்று (மூஸா) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, இருவரும் சென்றனர். இறுதியாக, கப்பலில் இருவரும் பயணித்த போது, அவர் அதில் ஓட்டையிட்டார். (உடனே) (மூஸா) கூறினார்: “இதில் உள்ளவர்களை நீர் மூழ்கடிப்பதற்காக அதில் ஓட்டையிட்டீரா? திட்டவட்டமாக மிக (அபாயகரமான) கெட்ட காரியத்தை நீர் செய்தீர்.”
Tamil Translation - Abdulhamid Baqawi71. (இவ்வாறு முடிவு செய்துகொண்டு) அவ்விருவரும் சென்றவழியில் குறுக்கிட்ட ஒரு கடலைக் கடக்க கப்பலில் ஏறியபோது, அவர் அதன் (ஒரு) பலகையைப் பெயர்த்து அதை ஓட்டையாக்கி விட்டார். அதற்கு மூஸா ‘‘இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீர் துவாரமிட்டீர்? நிச்சயமாக நீர் மிக்க அபாயகரமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டீர்'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70