وَرَءَا ٱلْمُجْرِمُونَ ٱلنَّارَ فَظَنُّوٓا۟ أَنَّهُم مُّوَاقِعُوهَا وَلَمْ يَجِدُوا۟ عَنْهَا مَصْرِفًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுற்றவாளிகள் நரகத்தை பார்த்து நிச்சயம் தாங்கள் அதில் விழக்கூடியவர்கள் தான் என்று உறுதி கொள்வார்கள். அதை விட்டு விலகுமிடத்தை அவர்கள் (தங்களுக்கு) காண மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், குற்றவாளிகள் நரகத்தை பார்த்து, நிச்சயமாக தாங்கள் அதில் விழக்கூடியவர்கள்தான் என்று உறுதி கொள்வார்கள். மேலும், அ(ந்த நரகத்)தை விட்டு விலகி செல்லுமிடத்தை அவர்கள் (தங்களுக்கு) காண மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. குற்றவாளிகள் நரகத்தைக் காணும் சமயத்தில் ‘‘நிச்சயமாக அதில் விழுந்து விடுவோம்'' என்று உறுதியாக எண்ணுவார்கள். அவர்கள் அதில் இருந்து தப்ப எந்த ஒரு வழியையும் காணமாட்டார்கள்.