caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:5

مَّا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ وَلَا لِـَٔابَآئِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَٰهِهِمْ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனைப் பற்றி எந்த அறிவும் அவர்களுக்கும் இல்லை, அவர்களுடைய மூதாதைகளுக்கும் இல்லை. அவர்களின் வாய்களிலிருந்து வெளிப்படும் (இந்த) சொல் பெரும் பாவமாகிவிட்டது. (இது மகா அபத்தமான சொல்லாகும்.) அவர்கள் பொய்யைத் தவிர கூறுவதில்லை.
Tamil Translation - Omar Sharifஅவனைப் பற்றி (-அல்லாஹ்வைப் பற்றி) எந்த அறிவும் அவர்களுக்கும் இல்லை, அவர்களுடைய மூதாதைகளுக்கும் இல்லை. அவர்களின் வாய்களிலிருந்து வெளிப்படும் (இந்த) சொல் பெரும் பாவமாக இருக்கிறது. அவர்கள் பொய்யைத் தவிர கூறுவதில்லை. (இறைவனைப் பற்றி இணைவைப்பாளர்கள் பேசுவதெல்லாம் பொய்யாகும்.)
Tamil Translation - Abdulhamid Baqawi5. அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையே தவிர (இவ்வாறு) இவர்கள் (உண்மை) கூறவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70