وَأُحِيطَ بِثَمَرِهِۦ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَىٰ مَآ أَنفَقَ فِيهَا وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُشْرِكْ بِرَبِّىٓ أَحَدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுடைய கனிகள் (இன்னும் அவனது இதர செல்வங்கள் எல்லாம்) அழிந்தன. தான் அதில் செலவழித்ததின் மீது (அதை எண்ணி வருந்தி) தன் இரு கைகளையும் புரட்ட ஆரம்பித்தான். அதன் செடி கொடிகளைவிட்டு அது வெறுமையாகிவிட்டது. (அவன் மறுமையில்) கூறுவான், “என் இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!”
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவனுடைய கனிகள் (இதர செல்வங்கள்) எல்லாம் அழிந்தன. ஆக, தான் அதில் செலவழித்ததின் மீது (வருத்தப்பட்டு) தன் இரு கைகளையும் அவன் புரட்ட ஆரம்பித்தான். இன்னும், அதன் செடி கொடிகளை விட்டு அ(வனது தோட்டமான)து வெறுமையாகி விட்டது. மேலும், அவன் (மறுமையில்) கூறுவான்: “என் இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!”
Tamil Translation - Abdulhamid Baqawi42. (அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளை பொருள் (செல்வம்)அனைத்தும் அழிந்தன. அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்து விட்டன. ஆகவே, அவற்றில் அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்து கொண்டான். (மறுமையில் இறைவன் முன் அவன் கொண்டுவரப்படும்போது) ‘‘என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?'' என்று (கைசேதப்பட்டு) கூறுவான்.