وَٱضْرِبْ لَهُم مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَٰبٍ وَحَفَفْنَٰهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓர் உதாரணத்தை அவர்களுக்கு விவரிப்பீராக! இரு ஆடவர்கள், அவ்விருவரில் ஒருவருக்கு திராட்சைகளினால் நிரம்பிய இரு தோட்டங்களை ஆக்கினோம். அவ்விரண்டையும் பேரிட்ச மரங்களால் சுற்றினோம். அவ்விரண்டுக்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharifமேலும், ஓர் உதாரணத்தை அவர்களுக்கு விவரிப்பீராக! இரு ஆடவர்கள், அவ்விருவரில் ஒருவருக்கு திராட்சைகளினால் நிரம்பிய இரு தோட்டங்களை ஆக்கினோம். இன்னும், அவ்விரண்டை சுற்றியும் (அதிகமான) பேரிட்ச மரங்களை ஏற்படுத்தினோம். மேலும், அவ்விரண்டுக்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் ஆக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. (நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக: அவர்களில் ஒருவனுக்கு இரு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவ்விரண்டைச் சூழவும் பேரீச்ச மரங்களை ஆக்கினோம். இவ்விரண்டிற்கும் மத்தியில் தானிய வயல்களை அமைத்தோம்.