caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kahf அத்தியாயம், வசனம் 105

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 69 · 18:105

أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ رَبِّهِمْ وَلِقَآئِهِۦ فَحَبِطَتْ أَعْمَٰلُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَزْنًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள்தான் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்தவர்கள். அவர்களுடைய (நல்ல) செயல்கள் (அனைத்தும்) அழிந்தன. ஆகவே, அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நிறுத்த மாட்டோம்.
Tamil Translation - Omar Sharifஇவர்கள் எத்தகையோர் என்றால் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்தார்கள். ஆகவே, அவர்களுடைய (நல்ல) செயல்கள் (அனைத்தும்) அழிந்து விட்டன. ஆகவே, அவர்களுக்காக மறுமை நாளில் எவ்வித எடையையும் நிறுத்த மாட்டோம். (அவர்களுக்கு எவ்வித மதிப்பும் மறுமையில் இருக்காது.)
Tamil Translation - Abdulhamid Baqawi105. இவர்கள்தான் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்து விட்டவர்கள். ஆகவே, அவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. (நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்த மாட்டோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70