أَفَحَسِبَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَن يَتَّخِذُوا۟ عِبَادِى مِن دُونِىٓ أَوْلِيَآءَ إِنَّآ أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَٰفِرِينَ نُزُلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பவர்கள் என்னை அன்றி என் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ள எண்ணினார்களா? நிச்சயமாக நாம் நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடங்களாக நரகத்தை தயார்படுத்தினோம்.
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பவர்கள் என்னை அன்றி என் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ள எண்ணுகிறார்களா? நிச்சயமாக நாம், நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடங்களாக நரகத்தை தயார்படுத்தினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi102. நிராகரிப்பவர்கள் நம்மை விட்டுவிட்டு நம் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு நரகத்தையே தங்குமிடமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.