قُل لَّئِنِ ٱجْتَمَعَتِ ٱلْإِنسُ وَٱلْجِنُّ عَلَىٰٓ أَن يَأْتُوا۟ بِمِثْلِ هَٰذَا ٱلْقُرْءَانِ لَا يَأْتُونَ بِمِثْلِهِۦ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! மனிதர்களும் ஜின்களும் இந்த குர்ஆன் போன்றதைக் கொண்டு வர ஒன்று சேர்ந்தாலும் இது போன்றதை அவர்கள் கொண்டு வர மாட்டார்கள், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! மனிதர்களும் ஜின்களும் இந்த குர்ஆன் போன்ற (ஒரு வேதத்)தைக் கொண்டு வர ஒன்று சேர்ந்தாலும் இது போன்ற (வேதத்)தை அவர்கள் கொண்டு வர மாட்டார்கள், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே.
Tamil Translation - Abdulhamid Baqawi88. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது.