وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلرُّوحِ قُلِ ٱلرُّوحُ مِنْ أَمْرِ رَبِّى وَمَآ أُوتِيتُم مِّنَ ٱلْعِلْمِ إِلَّا قَلِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) ரூஹ் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “ரூஹ் என் இறைவனின் கட்டளையினால் ஏற்பட்டது. கல்வியில் சொற்பமே தவிர நீங்கள் (அதிகம்) கொடுக்கப்படவில்லை.” என்று கூறுவீராக!
Tamil Translation - Omar Sharifமேலும், (நபியே!) ‘ரூஹ்’ பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “ரூஹ் என் இறைவனின் கட்டளையில் உள்ளதாகும். கல்வியில் சொற்ப அளவே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை” என்று கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi85. (நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு நீர் “அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமே தவிர உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)'' என்று கூறுவீராக.