وَٱسْتَفْزِزْ مَنِ ٱسْتَطَعْتَ مِنْهُم بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ وَعِدْهُمْ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَٰنُ إِلَّا غُرُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் நீ இயன்றவர்களை உன் சப்தத்தைக் கொண்டு தூண்டிவிடு; உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு; செல்வங்களிலும் சந்ததிகளிலும் அவர்களுடன் இணைந்து விடு; அவர்களுக்கு வாக்களி; ஏமாற்றுவதற்கே தவிர (வேறு எதற்கும்) ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களில் உனக்கு இயன்றவர்களை உன் சப்தத்தைக் கொண்டு தூண்டிவிடு; இன்னும், உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு; மேலும், (அவர்களுடைய) செல்வங்களிலும் சந்ததிகளிலும் அவர்களுடன் இணைந்து விடு; இன்னும், அவர்களுக்கு வாக்களி. ஆனால், ஏமாற்றுவதற்கே தவிர ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi64. ‘‘நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்து கொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி'' என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே தவிர வேறில்லை.