caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:4

وَقَضَيْنَآ إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ فِى ٱلْكِتَٰبِ لَتُفْسِدُنَّ فِى ٱلْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇஸ்ராயீலின் சந்ததிக(ளே! உங்க)ளுக்கு நிச்சயம் பூமியில் இருமுறை விஷமம் செய்வீர்கள்; (இறைவனுக்கு எதிராக) நிச்சயம் பெரும் பெருமை கொள்வீர்கள் என்று வேதத்தில் அறிவித்தோம்.
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக பூமியில் இரு முறை நீங்கள் விஷமம் செய்வீர்கள்; இன்னும், (இறைவனுக்கு முன்பாக) நிச்சயமாக நீங்கள் பெரும் ஆணவத்துடன் நடந்து கொள்வீர்கள் (-மக்கள் மீது கொடுங்கோலர்களாக, திமிர் பிடித்தவர்களாக ஆட்சி செய்வீர்கள்) என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தில் அறிவித்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நீங்கள் பூமியில் இரண்டு முறை விஷமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடை(ந்து கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள்! என்றும் (உங்களுக்கு அளித்த) வேதத்தில் நாம் முடிவு செய்துள்ளோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70