إِنَّ رَبَّكَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக உம் இறைவன், தான் நாடுகிறவருக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகின்றான்; (தான் நாடுகிறவருக்கு) அளவாக (சுருக்கி)க் கொடுக்கின்றான். நிச்சயமாக அவன், தன் அடியார்களை ஆழ்ந்தறிபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக உம் இறைவன், தான் நாடுகிறவருக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகிறான்; இன்னும், (தான் நாடுகிறவருக்கு) அளவாக (சுருக்கி)க் கொடுக்கிறான். நிச்சயமாக அவன், தன் அடியார்களை ஆழ்ந்தறிபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்து) அளவாக கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.)