وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ٱبْتِغَآءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீ உம் இறைவனிடமிருந்து ஓர் அருளை நாடி அதை ஆதரவு வைத்தவனாகவும் இருக்க (அது உனக்கு கிடைக்கின்ற வரை, யாசித்து வருகின்ற) அவர்களை நீ புறக்கணித்தால், அவர்களுக்கு மென்மையான சொல்லைச் சொல்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (மனிதனே!) நீ உம் இறைவனிடமிருந்து ஓர் அருளை நாடி, அதை ஆதரவு வைத்தவனாக இருக்கும் நிலையில் (யாராவது உன்னிடம் யாசித்து வரும்போது) அவர்களை நீ புறக்கணித்தால், அவர்களுக்கு மென்மையான சொல்லைச் சொல்! (அவர் மீது கடுகடுக்காதே!).
Tamil Translation - Abdulhamid Baqawi28. (நபியே! உம்மிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீர் உமது இறைவனின் அருளை எதிர் பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீர் புறக்கணிக்கும் படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுவீராக.