رَّبُّكُمْ أَعْلَمُ بِمَا فِى نُفُوسِكُمْ إِن تَكُونُوا۟ صَٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلْأَوَّٰبِينَ غَفُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் மனங்களில் உள்ளதை உங்கள் இறைவன் மிக அறிந்தவன். நீங்கள் நல்லவர்களாக இருந்தால் நிச்சயமாக அவன், (தன் தவறுகளை விட்டு திருந்தி நன்மையின் பக்கம்) முற்றிலுமாக மீளுகிறவர்களுக்கு மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஉங்கள் மனங்களில் உள்ளதை உங்கள் இறைவன் மிக அறிந்தவன். நீங்கள் நல்லவர்களாக இருந்தால் நிச்சயமாக அவன், (தன் பக்கம்) முற்றிலுமாக மீளுகிறவர்களை (-அதிகம் நன்மைகளை செய்பவர்களை) பெரிதும் மன்னிப்பவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான். நீங்கள் நன்னடத் தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கிறான்.