caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Israa அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 50 · 17:20

كُلًّا نُّمِدُّ هَٰٓؤُلَآءِ وَهَٰٓؤُلَآءِ مِنْ عَطَآءِ رَبِّكَ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(உலகை விரும்புகிற) இவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் கொடுத்துதவுவோம். உம் இறைவனின் கொடை (இவ்வுலகில் எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இருக்கவில்லை.
Tamil Translation - Omar Sharif(உலகை விரும்புகிற) இவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் கொடுத்து உதவுவோம். மேலும், உம் இறைவனின் கொடை (இவ்வுலகில் எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இருக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi20. (இம்மையை விரும்புகிற) அவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உமது இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உமது இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்பட்டதாக இல்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70