قَالَ لَقَدْ عَلِمْتَ مَآ أَنزَلَ هَٰٓؤُلَآءِ إِلَّا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ بَصَآئِرَ وَإِنِّى لَأَظُنُّكَ يَٰفِرْعَوْنُ مَثْبُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மூஸா) கூறினார்: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவனைத் தவிர (வேறு எவரும்) தெளிவான அத்தாட்சிகளாக இவற்றை இறக்கி வைக்கவில்லை என்பதை திட்டவட்டமாக நீ அறிந்தாய். ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிந்துவிடுபவனாக எண்ணுகிறேன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif(மூஸா) கூறினார்: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவனைத் தவிர (வேறு எவரும்) தெளிவான அத்தாட்சிகளாக இவற்றை இறக்கி வைக்கவில்லை என்பதை திட்டவட்டமாக நீ அறிந்தாய். ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிந்துவிடுபவனாக கருதுகிறேன்”
Tamil Translation - Abdulhamid Baqawi102. அதற்கு மூஸா (அவனை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கிவைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு (காலம்) பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.