caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 79

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:79

أَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ مُسَخَّرَٰتٍ فِى جَوِّ ٱلسَّمَآءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱللَّهُ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவான ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டவையாக (மிதக்கும்) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை அல்லாஹ்வைத் தவிர எவரும் தடு(த்து நிறுத்தி இரு)க்கவில்லை. நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharifவானத்தின் ஆகாயத்தில் (பறப்பதற்காகவும் மிதப்பதற்காகவும்) வசப்படுத்தப்பட்டவையாக (மிதக்கின்ற) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (வானத்தில்) அல்லாஹ்வைத் தவிர (எவரும்) தடுத்து வைக்கவில்லை. நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi79. ஆகாயத்தில் (பறந்து) செல்லும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) மிதந்தவையாக நிற்க வைப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவருமில்லை. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70