caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 69

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:69

ثُمَّ كُلِى مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ فَٱسْلُكِى سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ فِيهِ شِفَآءٌ لِّلنَّاسِ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு “ஒவ்வொரு பூக்களிலிருந்தும் புசி, உனது இறைவன் (உனக்கு அறிவித்த) சுலபமான வழிகளில் (உன் கூட்டை நோக்கிச்) செல்” (எனக் கட்டளையிட்டான்). இதனால் அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியேறுகிறது. அதில் மக்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifபிறகு, “ஒவ்வொரு பூக்களிலிருந்தும் புசி! ஆக, உனது இறைவன் (உனக்கு காண்பித்த) சுலபமான வழிகளில் (உன் கூட்டை நோக்கிச்) செல்!” (எனக் கட்டளையிட்டான்). இதனால், அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட பல நிறங்களையுடைய பானம் (தேன்) வெளியேறுகிறது. அதில் மக்களுக்கு நோய் நிவாரணம் உண்டு. சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi69. பின்னர் ‘‘நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளை இட்டான்). இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70