caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 64

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:64

وَمَآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَٰبَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ ٱلَّذِى ٱخْتَلَفُوا۟ فِيهِ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இவர்கள் எதில் தர்க்கித்தார்களோ அதை நீர் தெளிவுபடுத்துவதற்காகவும் (மக்கள் எல்லோருக்கும்) ஒரு நேர்வழியாக இருப்பதற்கும் (குறிப்பாக, அதை) நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு ஓர் அருளாக இருப்பதற்கே தவிர (வேறு எதற்கும்) உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கவில்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதை நீர் தெளிவுபடுத்துவதற்காக; (மக்கள் எல்லோருக்கும்) நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு அருளாகவும் இருப்பதற்காகவே தவிர உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi64. (நபியே!) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உம் மீது நாம் இறக்கி வைத்தோம். மேலும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70