وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَا يَبْعَثُ ٱللَّهُ مَن يَمُوتُ بَلَىٰ وَعْدًا عَلَيْهِ حَقًّا وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறக்கின்றவர்களை அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்ப மாட்டான் என்று அல்லாஹ் மீது இவர்கள் மிக உறுதியாக சத்தியம் செய்தனர். அவ்வாறன்று; (“இறந்தவர்களை எழுப்புதல்”) அவன் மீது கடமையான (சத்திய) வாக்காகும்! எனினும், மக்களில் அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifமேலும், “இறந்து போகிறவர்களை அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்ப மாட்டான்” என்று அல்லாஹ்வின் மீது இவர்கள் மிக உறுதியாக சத்தியம் செய்தனர். அவ்வாறன்று, (“இறந்தவர்களை எழுப்புதல்” என்பது) அவன் மீது கடமையான (சத்திய) வாக்காகும்! எனினும், மக்களில் அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. (நபியே!) இறந்தவர்களுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்ப மாட்டான் என்று இந்நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே மிக்க உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். அப்படி இல்லை; (‘‘உங்களை உயிர்கொடுத்து எழுப்புவான்'' என்று) நான் கூறிய வாக்கு முற்றிலும் உண்மையானதே! எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.