caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 27

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:27

ثُمَّ يَوْمَ ٱلْقِيَٰمَةِ يُخْزِيهِمْ وَيَقُولُ أَيْنَ شُرَكَآءِىَ ٱلَّذِينَ كُنتُمْ تُشَٰٓقُّونَ فِيهِمْ قَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ إِنَّ ٱلْخِزْىَ ٱلْيَوْمَ وَٱلسُّوٓءَ عَلَى ٱلْكَٰفِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, மறுமை நாளில் அவர்களை இழிவு படுத்துவான்; “(எனக்கு இணையானவை என நீங்கள் கற்பனை செய்து, பிறகு) அவர்கள் விஷயத்தில் (எது பெரியது? என்று) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த என் இணைகள் எங்கே?” என்று கூறுவான். கல்வி கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக இன்று இழிவும், தண்டனையும் நிராகரிப்பவர்கள் மீதுதான் (நிகழும்).”
Tamil Translation - Omar Sharifபிறகு, மறுமை நாளில் (அல்லாஹ்) அவர்களை இழிவு படுத்துவான். இன்னும், “நீங்கள் எனக்கு இணைவைத்து வணங்கிய தெய்வங்கள் எங்கே? அவர்கள் விஷயத்தில் நீங்கள் (என்னிடம்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே!” என்று கூறுவான். கல்வி கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக இன்று இழிவும், தண்டனையும் நிராகரிப்பவர்கள் மீதுதான் (நிகழும்).”
Tamil Translation - Abdulhamid Baqawi27. பின்னர், மறுமை நாளிலோ அவன் அவர்களை இழிவுபடுத்தி ‘‘நீங்கள் (உங்கள் தெய்வங்களை) எனக்கு இணையானவை என(க் கூறி நம்பிக்கையாளர்களுடன்) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?'' என்று கேட்பான். அச்சமயம் (இதை) அறிந்திருந்த (நம்பிக்கை கொண்ட)வர்கள் ‘‘இன்றைய தினம் இழிவும், வேதனையும் நிச்சயமாக நிராகரித்தவர்கள்மீதுதான்'' என்று கூறுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70