إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌ فَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஒரு இறைவன் தான். ஆகவே, மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய உள்ளங்கள் (அந்த உண்மையான இறைவனை) நிராகரிக்கின்றன. இன்னும் அவர்கள் பெருமையடிக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharif(நீங்கள் வணங்கத்தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆக, எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (அந்த உண்மையான இறைவனை) நிராகரிக்கின்றன. இன்னும், அவர்கள் (உண்மையான இறைவனை ஏற்காமல்) பெருமையடிக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆகவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (எதைக் கூறியபோதிலும்) நிராகரிப்பவைகளாகவே இருக்கின்றன. மேலும், அவர்கள் மிகக் கர்வம்கொண்டு பெருமையடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.