caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hijr அத்தியாயம், வசனம் 85

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 54 · 15:85

وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَإِنَّ ٱلسَّاعَةَ لَـَٔاتِيَةٌ فَٱصْفَحِ ٱلصَّفْحَ ٱلْجَمِيلَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்கே தவிர நாம் படைக்கவில்லை. நிச்சயம் (குறிப்பிட்ட) மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக.
Tamil Translation - Omar Sharifமேலும், வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்காகவே தவிர நாம் படைக்கவில்லை. இன்னும், நிச்சயமாக மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi85. வானங்களையும் பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரை இத்தீயவர்களின் விஷமத்தை) நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வருவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70