caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 39

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:39

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى وَهَبَ لِى عَلَى ٱلْكِبَرِ إِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif“வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியதாகும். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் ஆவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi39. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியது; அவன்தான் இவ்வயோதிக (கால)த்தில் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70