وَءَاتَىٰكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِن تَعُدُّوا۟ نِعْمَتَ ٱللَّهِ لَا تُحْصُوهَآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَظَلُومٌ كَفَّارٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அவனிடம் கேட்டதிலிருந் தெல்லாம் உங்களுக்கு (தன் அருளை) தந்தவன். அல்லாஹ்வின் அருளை நீங்கள் கணக்கிட்டால் அதை நீங்கள் எண்ண முடியாது! நிச்சயமாக (நம்பிக்கை கொள்ளாத) மனிதன் மகா அநியாயக்காரன், மிக நன்றி கெட்டவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் அவனிடம் கேட்ட எல்லாவற்றிலிருந்தும் உங்களுக்கு அவன் கொடுத்தான். மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க முடியாது! நிச்சயமாக (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத) மனிதன் மகா அநியாயக்காரன், மிக நன்றி கெட்டவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. இன்னும், நீங்கள் கேட்டவற்றை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே, அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதை உங்களால் எண்ண முடியாது! (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறவன், மிக மிக நன்றிகெட்டவன் ஆவான்.