caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ibrahim அத்தியாயம், வசனம் 27

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 72 · 14:27

يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْقَوْلِ ٱلثَّابِتِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْـَٔاخِرَةِ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّٰلِمِينَ وَيَفْعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டவர்களை உலக வாழ்விலும் மறுமையிலும், (லா இலாஹ இல்லல்லாஹ் எனும்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப் படுத்துகிறான். அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகெடுக்கிறான்; அல்லாஹ் தான் நாடுவதைச் செய்கிறான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கை கொண்டவர்களை உலக வாழ்க்கையிலும் மறுமையிலும், (லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகெடுக்கிறான்; இன்னும், அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் (‘கலிமா தையிப்' என்னும்) உறுதிமிக்க இந்த வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அல்லாஹ் விட்டுவிடுகிறான்; அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70