caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Ra'd அத்தியாயம், வசனம் 10

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 96 · 13:10

سَوَآءٌ مِّنكُم مَّنْ أَسَرَّ ٱلْقَوْلَ وَمَن جَهَرَ بِهِۦ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۭ بِٱلَّيْلِ وَسَارِبٌۢ بِٱلنَّهَارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் (தன்) பேச்சை ரகசியப்படுத்தியவனும் அதை பகிரங்கப்படுத்தியவனும் இரவில் (தனது தீமைகளை) மறைத்து செய்து பகலில் (நல்லவனாக) வெளிப்படுபவனும் அ(ந்த இறை)வனுக்குச் சமமே!
Tamil Translation - Omar Sharifஉங்களில் (தன்) பேச்சை ரகசியப்படுத்தியவனும்; அதை பகிரங்கப்படுத்தியவனும்; இரவில் (தனது தீமைகளை) மறைத்து செய்பவனாக இருந்துவிட்டு, மேலும், பகலில் (நல்லவனாக) வெளியே வருபவனும் அ(ந்த இறை)வனுக்குச் சமமானவர்களே! (அவன் அவர்கள் அனவைரையும் அவர்களின் எல்லா செயல்களையும் நன்கறிவான்.)
Tamil Translation - Abdulhamid Baqawi10. உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதை பகிரங்கமாகக் கூறினாலும் (அவனுக்கு இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அனைத்தும் அவனுக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70