إِذْ قَالُوا۟ لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰٓ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِى ضَلَٰلٍ مُّبِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் ஒரு (பெரும்) கூட்டமாக இருக்க, திட்டமாக யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்கள் ஆவர். (இதில்) நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறில்தான் இருக்கிறார்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக.
Tamil Translation - Omar Sharifநாம் ஒரு (பெரும்) கூட்டமாக இருக்கும் நிலையில், திட்டமாக யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கிறார்கள். (இதில்) நிச்சயமாக நம் தந்தை தெளிவான தவறில்தான் இருக்கிறார்” என்று அவர்கள் (தங்களுக்குள்) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (யஅகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்'' என்றும்,