قَالُوا۟ نَفْقِدُ صُوَاعَ ٱلْمَلِكِ وَلِمَن جَآءَ بِهِۦ حِمْلُ بَعِيرٍ وَأَنَا۠ بِهِۦ زَعِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அரசருடைய குவளையை இழக்கிறோம்” என்று கூறினர், அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (அளவு தானியம் வெகுமதியாக) உண்டு. நான் அதற்கு பொறுப்பாளன் (என்று அவர்களில் ஒருவன் கூறினான்).
Tamil Translation - Omar Sharif“அரசருடைய குவளையை இழக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். இன்னும், “அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (அளவு தானியம் வெகுமதியாக) உண்டு. நான் அதற்கு பொறுப்பாளன்” (என்று அவர்களில் ஒருவர் கூறினார்.)
Tamil Translation - Abdulhamid Baqawi72. அதற்கவர்கள், ‘‘அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதை எவர் (தேடிக்) கொடுத்த போதிலும் அவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி'' என்று (அவர்களில் ஒருவன்) கூறினான்.