وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦٓ أَسْتَخْلِصْهُ لِنَفْسِى فَلَمَّا كَلَّمَهُۥ قَالَ إِنَّكَ ٱلْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! நான் அவரை எனக்கென மட்டும் பிரத்தியேகமாக ஆக்கிக்கொள்வேன்” என்று அரசர் கூறினார். (அரசர்) அவருடன் பேசியபோது, “(யூஸுஃபே!) நிச்சயமாக நீர் இன்று நம்மிடம் தகுதியுடையவர், நம்பிக்கையாளர்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif“அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! நான் அவரை எனக்கென மட்டும் பிரத்தியேகமாக ஆக்கிக்கொள்வேன்”என்று அரசர் கூறினார். (அரசர்) அவருடன் பேசியபோது, “(யூசுஃபே!) நிச்சயமாக நீர் இன்று நம்மிடம் தகுதியுடையவர், நம்பிக்கையாளர்”என்று கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi54. (யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) ‘‘அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்'' என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) ‘‘நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்'' என்றார்.