caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 101

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:101

رَبِّ قَدْ ءَاتَيْتَنِى مِنَ ٱلْمُلْكِ وَعَلَّمْتَنِى مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ أَنتَ وَلِىِّۦ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ تَوَفَّنِى مُسْلِمًا وَأَلْحِقْنِى بِٱلصَّٰلِحِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் இறைவா! திட்டமாக நீ எனக்கு ஆட்சியை தந்தாய். (கனவு சம்பந்தமான) பேச்சுகளின் விளக்கத்தை எனக்கு கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே, நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். என்னை முஸ்லிமாக உயிர் கைப்பற்றிக்கொள்! நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு!”
Tamil Translation - Omar Sharif“என் இறைவா! திட்டமாக நீ எனக்கு ஆட்சியை தந்தாய். (கனவு சம்பந்தமான) செய்திகளின் விளக்கத்தை எனக்கு கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே. நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் முஸ்லிமாக இருக்கும் நிலையில் என்னை உயிர் கைப்பற்றிக்கொள்! இன்னும், நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு!”
Tamil Translation - Abdulhamid Baqawi101. ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!'' (என்று பிரார்த்தித்தார்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70