قَالُوٓا۟ أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ ٱللَّهِ رَحْمَتُ ٱللَّهِ وَبَرَكَٰتُهُۥ عَلَيْكُمْ أَهْلَ ٱلْبَيْتِ إِنَّهُۥ حَمِيدٌ مَّجِيدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“(இப்ராஹீமின் மனைவியே!) அல்லாஹ்வுடைய கட்டளையில் வியப்படைகிறீரா? அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருள்களும் (இப்ராஹீமுடைய) வீட்டாரே உங்கள் மீது நிலவுக! நிச்சயமாக அவன் மகா புகழாளன், மகா கீர்த்தியாளன்” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharif(வானவர்கள்) கூறினார்கள்: “(இப்ராஹீமின் மனைவியே!) அல்லாஹ்வுடைய கட்டளையில் வியப்படைகிறீரா? அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருள்களும் (அபிவிருத்திகளும் இப்ராஹீமுடைய) வீட்டாரே உங்கள் மீது நிலவுக! நிச்சயமாக அவன் மகா புகழாளன், மகா கீர்த்தியாளன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi73. அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய நற்பாக்கியங்களும் (இப்றாஹீமுடைய) வீட்டிலுள்ள உங்கள் மீது நிலவுக. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவன், மகிமை உடையவன்'' என்று கூறினார்கள்.