وَيَصْنَعُ ٱلْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِۦ سَخِرُوا۟ مِنْهُ قَالَ إِن تَسْخَرُوا۟ مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கப்பலைச் செய்கிறார். அவருக்கு அருகில் அவருடைய மக்களிலிருந்து முக்கிய பிரமுகர்கள் கடந்தபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர். (அதற்கு) அவர் “நீங்கள் (இப்போது) எங்களைப் பரிகசித்தால், நீங்கள் பரிகசிப்பது போன்று (சீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவர் கப்பலைச் செய்கிறார். அவருக்கு அருகில் அவருடைய மக்களிலிருந்து பிரமுகர்கள் கடந்து சென்றபோதெல்லாம் அவர்கள் அவரை கேலி செய்தனர். (அதற்கு) அவர் கூறினார்: “நீங்கள் (இப்போது) எங்களை கேலி செய்தால், நீங்கள் கேலி செய்வது போன்று (சீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களை கேலி செய்வோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi38. அவர் கப்பலைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், அதன் சமீபமாகச் சென்ற அவருடைய மக்களின் தலைவர்கள் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் ‘‘நீங்கள் (இப்போது) எங்களைப் பரிகசிக்கும் இவ்வாறே (அதிசீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்'' என்று கூறினார்.