caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:20

أُو۟لَٰٓئِكَ لَمْ يَكُونُوا۟ مُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ وَمَا كَانَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ مِنْ أَوْلِيَآءَ يُضَٰعَفُ لَهُمُ ٱلْعَذَابُ مَا كَانُوا۟ يَسْتَطِيعُونَ ٱلسَّمْعَ وَمَا كَانُوا۟ يُبْصِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் பூமியில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்துபவர்களாக இருக்கவில்லை. அல்லாஹ்வையன்றி, அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இல்லை. அவர்களுக்கு வேதனை பன்மடங்காக்கப்படும். (இவ்வுலகில்) அவர்கள் (உண்மையை) செவியேற்க சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை; அவர்கள் (இறை அத்தாட்சியைப்) பார்ப்பவர்களாகவும் இருக்கவில்லை.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் பூமியில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்துபவர்களாக இருக்கவில்லை. இன்னும், அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தண்டனை பன்மடங்காக்கப்படும். (இவ்வுலகில்) அவர்கள் (உண்மையை) செவியேற்க சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. இன்னும், அவர்கள் (படிப்பினை பெறுகின்ற பார்வையால் இறை அத்தாட்சியைப்) பார்ப்பவர்களாகவும் இருக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi20. இவர்கள் பூமியில் (ஓடி தப்பித்து அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து, இவர்களுக்கு உதவி செய்பவர்களும் இல்லை. (மறுமையிலோ) இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும். இவர்கள் (தங்கள் பொறாமையின் காரணமாக நல்ல வார்த்தைகளைச்) செவியுற சக்தியற்றவர்கள்; (நேரான வழியைக்) காணவும் மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70