caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:10

وَلَئِنْ أَذَقْنَٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ ٱلسَّيِّـَٔاتُ عَنِّىٓ إِنَّهُۥ لَفَرِحٌ فَخُورٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின்னர் அவனுக்கு இன்பத்தை நாம் சுவைக்க வைத்தால், “என்னை விட்டு தீமைகள் சென்றன” என்று நிச்சயமாக கூறுவான். நிச்சயமாக அவன் (செருக்குடன்) மகிழ்பவனாக தற்பெருமையாளனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின்னர் இன்பத்தை அவன் சுவைக்கும்படி நாம் செய்தால், “என்னை விட்டு தீமைகள் சென்று விட்டன” என்று நிச்சயமாக கூறுவான். நிச்சயமாக அவன் செருக்குடன் மகிழ்பவனாக தற்பெருமை பேசுபவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் ‘‘நிச்சயமாக என் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வராது)'' என்று கூறுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாக, பெருமையடிப்பவனாக ஆகிவிடுகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70