وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِى ٱلْأَرْضِ لَٱفْتَدَتْ بِهِۦ وَأَسَرُّوا۟ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅநியாயம் செய்த ஒவ்வோர் ஆன்மாவிற்கும் பூமியில் உள்ளவை (அனைத்தும் சொந்தமாக) இருந்தால் அவற்றை அது பரிகாரமாகக் கொடுத்துவிடும்! அவர்கள் வேதனையைக் காணும்போது துக்கத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும்; அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அநியாயம் செய்த ஒவ்வோர் ஆன்மாவிற்கும் பூமியில் உள்ளவை (அனைத்தும் சொந்தமாக) இருந்தால் (அந்த ஆன்மா தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு) அவற்றை மீட்புத் தொகையாக கொடுத்து தன்னை விடுவித்துவிடும்! இன்னும், அவர்கள் தண்டனையைக் (கண்ணால்) காணும்போது துக்கத்தை மறைத்துக் கொள்வார்கள். இன்னும், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; இன்னும், அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi54. அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்கள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிடக் கருதும்! மேலும், வேதனையைக் கண்ணால் காணும் அந்நேரத்தில் (மக்கள்) துக்கத்தை மறைத்துக் கொள்(ள கருது)வார்கள் (அந்நாளில்) அவர்களுக்கு நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; (அணுவளவும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.